Skip to main content

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

 தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்


1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல்
பெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான  மரங்கள் மற்றும் உரம், நீர்  ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம்.
அ. அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்
அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை வெட்டி அப்புறப்படுத்தவதன் மூலம் மகசூலை அரிகரிக்கலாம். இதனால் சாகுபடி செலவை மிச்சப்படுத்துவதோடு நிகல லாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல்
பரிந்துரை செய்யப்பட்ட உரம் +நீர்+சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளின் மகசூலை அதிகரிக்கலாம்.
2. பென்சில் முனை குறைபாடு
நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய், இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலையின் அளவும்  பெருமளவில் குறைந்து இலைகள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பரிந்துரைக்கபட்ட உரங்களோடு போராக்ஸ், துத்தநாக சல்பேட்டு, மெக்னீசியம் சல்பேட், தாமிர சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரை வட்டப்பாத்திகளில் ஊற்றவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைபாட்டை சரி செய்துவிடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுக்களை நடவு செய்யலாம்.
3. குரும்பை உதிர்தல்

Comments

Popular posts from this blog

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருக்கிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு பயன்படும். இந்த உரத்தை செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில், தொட்டியில், குழியில் போட்டு வைக்கவும்கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது. மண்புழு குளியல் நீர்மண்புழு உரத்தைப் போலவே, மண்புழு குளியல் நீரும் பயிர்களுக்கு ஊட்டம் தரும். மண்புழு உரம் உள்ள தொட்டியில் தண்ணீரைச் சொட்ட விடுவதன் மூலம் மண்புழு குளியல் நீரைத் தயாரிக்க முடியும். சொட்டும் நீர் கீழே இறங்கும்போது, மண்புழு…

5 ஏக்கர்… 4 ஆண்டுகள்… 9 லட்ச ரூபாய் லாபம் சவுக்கில்!

ஏக்கருக்கு 4,800 கன்றுகள்ஏக்கருக்கு 50 டன் சராசரி மகசூல்ஒரு டன் 4,500 ரூபாய்தண்ணீர் கண்டிப்பாக தேவைகளர்மண்ணில் வளராது காய்கறி, நெல், கரும்பு, வாழை… எனக் காலங்காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள் கூட விலையின்மை, வறட்சி  போன்ற காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்றுத்தொழில் தேடி வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால், ‘விவசாயத்தை விடாமல் செய்ய வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு மாற்றுப் பயிராக இருப்பது, மரப்பயிர் சாகுபடி. இதில் வேலையாட்கள் தேவை, பராமரிப்பு போன்றவை குறைவாக இருப்பதால், மரப்பயிர் சாகுபடி பல விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது. அப்படி மரப்பயிருக்கு மாறி, சவுக்கு மர சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நந்தகுமார். மதுராந்தகத்தை அடுத்த, நல்லாமூர் கிராமத்தில் உள்ளது, நந்தகுமாரின் பண்ணை. பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த நந்தகுமாரைச் சந்தித்தோம். “தாத்தா காலத்துல இருந்தே விவசாயத்துல ஈடுபட்டுட்டு இருக்கோம். நானும் சின்ன வயசுலயே அப்பாவுக்கு உதவியா தோட்டத்துக்குப் போயிடுவேன். நான் காலேஜ் முடிச்ச சமயத்துல அப்பா இறந்து போகவும்,  2003-ம் வரு…

"பண்ணை குட்டை அமைத்தால் 100 சதவீதம் மானியம் பெறலாம்'

"பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும்,' என வேளாண் துறை அறிவித்துள்ளது. அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணராஜன் வெளிட்டுள்ள அறிக்கை:நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், பருவ மழை குறைவை சமாளிக்கவும், ஒவ்வொரு ஊராட்சியிலும், பண்ணை குட்டைகள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்னூர் வட்டாரத்தில் ஒரு பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு மூன்று வீதம் 66 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.100 அடி நீளம், 100 அடி அகலம் மற்றும் ஐந்து அடி ஆழத்துடன் பண்ணை குட்டை அமைக்க வேண்டும். இதற்கு அரசு 100 சதவீதம் மானியம் அளிக்கிறது. பண்ணை குட்டை அமைப்பதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீர் வீணாகாது. விவசாய பரப்பு அதிகரிக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பண்ணை குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அன்னூர் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள் மற்றும் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.More details