Posts

நிலக்கடலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க…

Image
சோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்துநிலக்கடலைஅதிக பரப்பளவில் நம்நாட்டில் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான மணற்பாங்கான கற்றோட்டமும், நல்ல வடிகால் வசதியுமுடைய செம்மண் நிலத்தில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து, உற்பத்தி திறனைக் கூட்டலாம்.இதுகுறித்து வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ம.மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நிலக்கடலை உற்பத்தியில் சராசரியாக ஹெக்டேருக்கு 1.1 டன்னாக இந்திய அளவிலும், தமிழக அளவில் 2.2 டன்னாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் மகசூல் பெற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.பருவம்: நிலக்கடலை விதைப்புக்கு ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்) மற்றும் மார்கழி பட்டம் (டிசம்பர், ஜனவரி) மிகவும் சிறந்த மாதங்களாகும். அறுவடை சமயத்தில் அதிக மழையை தவிர்த்திடவும், வறட்சி மற்றும் பூச்சி நோய்த் தாக்குதலைக் குறைத்திடவும், மகசூலை அதிகரிக்க பருவத்தில் விதைப்பது நல்லது.ரகங்கள்:பருவத்துக்கு ஏற்ற உயர் விளைச்சல் ரகங்களை தேர்வ…

பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்!

Image
பயறுவகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.மேலும், பயறு வகைப் பயிர்களை ஊக்குவித்திட, நிலத்தில் நீர்ப்பாசன குழாய்கள் பதிக்க ரூ.15 ஆயிரம் அளவில் ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. வயல் வரப்புகளில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் பயறு வகை விதைகள், பயறு வகைப் பயிர்களுக்கு இலைவழி தெளிப்புக்கு, டிஏபி உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குகிறது. இந்த வகையில் பல்வேறு திட்டங்களை பயறு வகை உற்பத்தியை அதிகரித்திட தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.உற்பத்தியை பெருக்கும் வழிகள்:உளுந்து உள்ளிட்ட பயறு வகை…

லாபம் தரும் தேனீ வளர்ப்பு

Image
மழைப்பொழிவு குறைந்து வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளிடையே, மாற்றி யோசித்து தண்ணீர்த் தேவையின்றிதேனீவளர்ப்பில் மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார் பொள்ளாச்சி விவசாயி விவேக்.வறட்சி, நோய்த் தாக்குதல், விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடன் தொல்லையால் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தற்போதைய விவசாயத்தின் நிலை இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சில விவசாயிகள் மட்டும் விவசாயத்துடன், விவசாயம் சார்ந்த மாற்றுத் தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், பொள்ளாச்சியை அடுத்த பெரியபோதுவைச் சேர்ந்த விவசாயி விவேக், தேனீ வளர்ப்பின் மூலமாக மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார்.ஆனைமலையைச் சேர்ந்த எம்.வி.சுப்ரமணியம் என்ற விவசாயி வாயிலாக கடந்த 2015- இல் தேனீ வளர்ப்பு குறித்து விவேக் அறிந்துகொண்டார். அவரிடமிருந்து 7 பெட்டிகளுடன் தேனீயை வாங்கி வளர்க்கத் துவங்கினார். தேனீ வளர்ப்பில் அனுபவம் இல்லாவிட்டாலும் முன்னோட…

மனிதன் அறிந்து கொள்ளவேண்டிய மூன்று முக்கிய உண்மைகள் !

பசித்த வயிறு ...! பணமில்லா  வாழ்க்கை...!! பொய்யான உறவுகள்...!!! இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தை  எவனொருவனாலும் கற்றுக் கொடுக்க முடியாது... 

நாள்பட்ட நெஞ்சு சளியை வெளியேற்ற உதவும் சில கை வைத்தியங்கள்!

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?
பாட்டி வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் பாட்டி வைத்தியங்கள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய சில எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் சளி, இருமல் பிரச்சனை போவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வெந்தய டீ வெந்தய டீ * ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய வி…

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :
உச்சியிலே கண் சுருக்கி, அண்ணாந்து பாத்து பாத்து 
வராத மழைக்காக ஏங்கி நிற்கும் ஏழை உழவன்,
தூரல் கொஞ்சம் விழுந்ததுமே, விதைபோட கடன் வாங்கி,
இருப்பதெல்லாம் அடகு வச்சு, ஏரோட்டி விதைச்சுடுவான்.,
முளை விட்ட பயிர்கண்டு  பிள்ளை பெற்ற ஆனந்தம் 
களை வெட்டி உரம் வச்சு கண்ணைபோல பாதுகாத்து 
ஒட்டிப்போன வயிறோடு  மாடாக உழைச்சிடுவான் 
போட்டதுல அரைவாசி  வேசையில கருகிடவே 
கலங்காம அறுவடைய  காலத்துல செஞ்சிருவான் 
அடிச்சு வச்ச மூட்டையெல்லாம், மனக்கணக்கு போட்டிடுவான் 
வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,
வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக, நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான் 
வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,
கடன்காரன் வாசலிலே  கத்திவிட்டு போகையிலே 
வழியின்றி நிற்கையிலே  கண்ணில் படும் காளை மாடு,
கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக 
மரணவலி கொண்டிடுவான்  மானமுள்ள உழவன் மகன் 
இருப்பதெல்லாம் போனாலும், உழவையவன் விடுவதில்லை.,
காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று .... 
பட்டமுந்தான் வந்…

USB Driveகளை Format செய்வதற்கு…

நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்லப் பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள driveகளை virus அல்லது வேறு சில காரணங்களினால் format செய்ய நேரிடும். அப்போது virus பிரச்சினையின் காரணமாக format செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் format செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை open செய்ததும் தோன்றும் windowவில் format என்ற button அழுத்தி format செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். மேலும் FAT32 and NTFS formatகளை உடையது ஆகும்.                  பதிவிறக்கம் செய்ய :
http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/HP-USB-Disk-Storage-Format-Tool.shtmlஎந்தவித மென்பொருளும் இல்லாமல் கணணியில் நிறுவியுள்ள இயங்குதளங்களின் மூலமாகவே USB driveகளை format செய்து கொள்ள முடியும்.முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt open செய்ய வேண்டும். பின் My computer …